Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவாரூர் தேர்தல் ரத்து – கொதித்தெழுந்த கேப்டன் !

திருவாரூர் தேர்தல் ரத்து – கொதித்தெழுந்த கேப்டன் !
, திங்கள், 7 ஜனவரி 2019 (15:39 IST)
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இது குறித்து பல அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திருவாரூருக்கு ஜனவரி 28 ஆம் தேதி நடக்கும் என தேர்தல் அறிவித்த சூட்டோடு தேர்தல் ரத்து செய்தியையும் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவித்த உடனே திமுக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர்.  அதிமுக வேட்பாளர் தேர்வின் கடைசிக் கட்டத்தில் இருந்தது. தேமுதிக, பாமக ஆகியக் கட்சிகள் தேர்தல் குறித்து எந்த தகவலும் அறிவிக்காமல் இருந்தனர். இப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தேர்தல் ஆணையத்தின்  மீதான தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

உடல் நிலை குறைபாடு காரணமாக அமெரிக்காவில் சிகிச்ச்சை பெற்று வரும் கேப்டன் இப்போது இந்த செய்தியை அறிந்து தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவித்து பின்பு தேர்தலை ரத்து செய்துள்ளது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை :-

’ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும் மாறியிருப்பது கண்டனத்திற்குரியது. கஜாப் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான நிவாரணப்பணிகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்றும் கேட்கவில்லை,அது போல தேர்தல் அறிவித்த பின்பு தேர்தல் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர்’.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் சிறப்புப் பணம் – ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் !