பீஹாரில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் ஷூ அணிந்து வருவதற்கு அம்மாநில பள்ளிக்கல்வி வாரியம் தடை விதித்துள்ளது.
பீஹாரில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் பொதுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு உதவி செய்ய அவர்களின் பெற்றோர்களே உதவி செய்தது தான் கொடுமை. காப்பி அடித்து பாஸ் ஆன ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என அரசு அறிவித்தது. இதனை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது.
இந்நிலையில் பீஹாரில் வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் 10ம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுவில் தேர்வு மையத்துக்கு மாணவர்கள், 'பிட்' எடுத்து வருவதை தடுக்கும் வகையில், மாணவர்கள், ஷூ, சாக்ஸ் அணிந்து வர மாநில பள்ளிக்கல்வி வாரியம் தடை விதித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.