Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 22 மே 2025 (14:14 IST)
மத்திய பிரதேசம் சியோனி மாவட்டத்தில் நடந்த மோசடி ஒரு புறம் பரிதாபம், மறுபுறம் கோடிக்கணக்கான அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
 
பாம்பு கடித்து இறந்தவர்களுக்கான நிவாரணத் தொகையை பெற, இரு நபர்கள் அதாவது ஒருவர் 30 முறை, மற்றொருவர் 28 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலி பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு 58 முறைகள் போலியாக காட்டப்பட்டுள்ளன.
 
இதற்காக சுமார் ரூ.11.26 கோடி மோசடியாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு தரவுகளில், இறப்புகள் பாம்பு கடிதல், மின்னல் தாக்குதல், நீரில் மூழ்குதல் ஆகிய நிகழ்வுகளுக்கு நிவாரண நிதி வழங்குவதை இந்த இருவர் மோசடியாக பயன்படுத்தியுள்ளனர். 
 
இந்த மோசடி 2018 முதல் 2022 வரை நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி இறப்புகள், போலியான நிவாரண கோரிக்கைகள், போலி பில்கள் எல்லாம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
ஜபல்பூர் நிதி துறை மேற்கொண்ட ஆய்வின் போது. முக்கியமாக, மோசடிக்கு பின்னால் உள்ள  கியோலாரி தாலுகா அலுவலக உதவியாளரான சச்சின் தஹாயக் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் பாம்பு கடித்ததற்கான நிவாரண நிதி பெற்று அந்த பணத்தை  தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வங்கி கணக்குகளில் அனுப்பியுள்ளார்.
 
இதுவரை 47 பேரின் கணக்குகளில் இந்த தொகை சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக ரூ.23.81 கோடி அளவிலான மோசடி மத்திய பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் நடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments