உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருமல், சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை, மருத்துவர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐந்து வயது சிறுவன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலால் நகரில் சளி பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது, மருத்துவர் சுரேஷ் சந்திரா என்பவர், சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, சிகரட்டை அவனுடைய வாயில் வைத்து, பற்ற வைத்தார்.
அந்த சிகரத்தை புகைக்கும் அவர் கூறுகிறார். இது குறித்த வீடியோ, இணையத்தில் வைரலாகியது.
இதனை அடுத்து, மருத்துவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், துறைரீதியிதிலான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மருத்துவர், சளி, இருமலுக்கு ஒரு சிறுவனை சிகரெட் புகைக்க வைப்பது 'கொடுமையிலும் கொடுமை' என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.