Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது தாயின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்… ஷப்னம் அலியின் மகன் வேண்டுகோள்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (10:59 IST)
உத்தரபிரதேசத்தில் காதலரோடு சேர்ந்து தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் கொலை செய்த ஷப்னம் அலியின் தூக்கு தண்டனை மிக விரைவில் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி, தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் அனைவரையும் காதலனின் உதவியோடு கொலை செய்தார். 2008 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பத்து மாதக் குழந்தையும் அடக்கம்.

இதையடுத்து ஷப்னம் அலி மற்றும் அவர் காதலர் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது ஷப்னம் அலி தனது தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ளர். இந்தியாவிலேயே பெண்களை தூக்கில் போடும் வசதி மதுரா சிறையில் மட்டும்தான் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தூக்கிலிடு பணியாளர் பவான் ஜல்லாத் அந்த இடத்தை மேற்பார்வையிட்டு அதில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளாராம். அதனால் ஷப்னம் அலி விரைவில் தூக்கில் போடப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷப்னம்மின் மகன் முகமத் தாஜ் ‘எனது தாயை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். என் தாய்க்கான மரண தனடனையை குறைத்து அவருக்கு மன்னிப்பு வழங்குங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments