Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த சண்முகநாதன்: பெண் பத்திரிகையாளர் பகீர் தகவல்!

கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த சண்முகநாதன்: பெண் பத்திரிகையாளர் பகீர் தகவல்!

Advertiesment
கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த சண்முகநாதன்: பெண் பத்திரிகையாளர் பகீர் தகவல்!
, சனி, 28 ஜனவரி 2017 (18:32 IST)
மேகாலய ஆளுநராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் மீது அந்த மாநிலத்தில் பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பி.ஆர்.ஓ. வேலை கேட்டு நேர்முகத் தேர்வுக்கு சென்ற ஒரு பெண் பத்திரிகையாளரை ஆளுநர் சண்முகநாதன் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன.


 
 
இது தொடர்பாக மேகாலயாவில் உள்ள தி ஷிலாங் டைம்ஸ் என்னும் ஆங்கில நாளிதழின் ஆசிரியரும் மூத்த பெண் பத்திரிகையாளருமான பேட்ரீஷியா முக்கீம் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது சண்முகநாதன் பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து கூறியுள்ளார்.
 
பேட்ரீஷியா கூறியதாவது, கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி ஒரு இளம் பெண்ணிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் மிகவும் பதற்றத்துடன் தன்னுடையை பெயரை சொன்னார். அந்தப் பெண் என்னிடம் உதவி ஆசிரியராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர்.
 
அப்போது கூறிய அந்த பெண் தான் பிஆர்ஓ வேலை கேட்டு இரவு 7 மணிக்கு ஆளுநர் சண்முகநாதனை சந்திக்க சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். நேர்முகத்தேர்வுக்கு வந்த தன்னிடம் சம்மந்தமில்லாத பல விஷயங்களை ஆளுநர் கேட்டதாகவும், தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றிக் கேட்டதாகவும் கூறினார்.
 
அந்த அறையில் தன்னையும், ஆளுநரையும் தவிர வேறு இருக்கவில்லை. நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் அவசர அவசரமாக அந்த அறையிலிருந்து நான் வெளியேறிய போது திடீரென்று பின்னால் வந்த சண்முகநாதன் தன்னை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்ததாக அந்தப் பெண் கூறினார் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்ன பன்றது: அதிர்ச்சியில் குடிகாரர்கள் சங்கம்!