Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கொரோனா.. மீண்டும் தடுப்பூசி! கோவிஷீல்டு தயாரிக்க தொடங்கிய சீரம் நிறுவனம்!

மீண்டும் கொரோனா.. மீண்டும் தடுப்பூசி! கோவிஷீல்டு தயாரிக்க தொடங்கிய சீரம் நிறுவனம்!
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:14 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாத காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருவதுடன், மருத்துவ உதவிகளையும் அதிகப்படுத்தி வருகின்றன.

2020ல் கொரோனா பரவல் அதிகரித்த காலம் தொடங்கி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு மத்திய அரசின் மூலமாக இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. இதுவரை 200 கோடி டோஸ் அளவில் மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒருவருக்கு கால இடைவெளியுடன் இரண்டு டோஸ் என செலுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்ததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பை நிறுத்தி இருந்தது. ஆனால் தற்போது பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது. விரைவில் பல பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் புத்தாண்டு! பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது!