சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமின் வாங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 26-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.