Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (13:59 IST)
அமெரிக்காவின் குற்றச்சாட்டிலும் குற்ற பத்திரிகையிலும் அதானி பெயரும், அவருடைய மருமகன் பெயரும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் முகுல் அதானி குழுமம் சார்பாக பல வழக்குகளில் ஆஜரானாலும், நான் அதானி குழுமம் சார்பாக இங்கே பேசவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அமெரிக்க நீதிமன்றம் எழுஓஉட குற்றச்சாட்டை முழுவதும் ஆராய்ந்ததில், முதல் குற்றச்சாட்டு, ஐந்தாவது குற்றச்சாட்டும் தான் முக்கியமானது. இந்த இரண்டிலும் அதானி பெயரோ, அவருடைய மருமகன் சாகர் அதானி பெயரோ இல்லை என்பது தான் உண்மை.
 
முதல் குற்றச்சாட்டில் சில அதிகாரிகள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதல் குற்றச்சாட்டு, வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறுவதற்கான சதி நடந்தது என்பதாகும். இந்த இரண்டிலும் அதானி பெயர் இல்லை. ஐந்தாவது குற்றச்சாட்டு, நீதிக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகும். இதிலும் அதானி மற்றும் அவருடைய நிறுவனத்தின் அதிகாரிகள் பெயர் இல்லை. இருப்பினும், அதானி குடும்பம் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார்கள், பங்குச்சந்தைக்கும் பதிலளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
 
ஒரு குற்றப்பத்திரிக்கையில் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, அவர் இந்த தவறை செய்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதானி குழுமத்தின் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களில் யார் லஞ்சம் வழங்கினார், யார் வாங்கினார் என்பது குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. இது ஆதாரம் இல்லாத குற்றப்பத்திரிகை என்பதால், இதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று வழக்கறிஞர் புகழ் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments