Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 கோடிக்கு கார் வெச்சுருப்பீங்க, ஆனா நிவாரண நிதிக்கு சில லட்சம் தானா? நடிகர்களை விளாசும் சீனியர் நடிகை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:20 IST)
4 கோடி ரூபாய்க்கு கார் வைத்திருக்கும் நடிகர்கள், கேரள வெள்ள நிவாரண நிதிக்காக சில லட்சங்கள் மட்டுமே கொடுக்க முடியுமா என நடிகர்களை சீனியர் நடிகை ஷீலா விளாசியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
தமிழ் நடிகர் லாரன்ஸ் வெள்ள நிவாரண நிதிக்காக 1 கோடி ரூபாயும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 1 கோடி ரூபாயும், ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாயும் கொடுத்துள்ளனர்.
 
ஆனால் கேரள நடிகர்கள் சில லட்சங்களை மட்டுமே நிவாரண நிதியாக அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த சீனியர் நடிகை ஷீலா, பல முன்னணி மலையாள நடிகர்கள் 4 கோடி ரூபாய்க்கு கார் வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களால் வெள்ளத்தால் உடைமைகளை இழந்து பரிதவித்து வரும் கேரள மக்களுக்கு சில லட்சங்கள் மட்டுமே நிவாரண நிதியாக வழங்க முடிகிறது.
 
அவர்களின் இந்த உயர்ந்த நிலைக்கு காரணம் கேரள ரசிகர்களே. அந்த நன்றி உணர்வு கூட பல நடிகர்களுக்கு இல்லை என ஷீலா ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments