கடைசி 4 நிமிடங்கள் முக்கியமானது.. ‘சந்திராயன் 3’ குறித்து விஞ்ஞானிகள் தகவல்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (16:03 IST)
இஸ்ரோ அனுப்பிய ‘சந்திராயன் 3’ விண்கலம் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க இருக்கும் நிலையில் நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய கடைசி நான்கு நிமிடங்கள் மிகவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
கடைசி நேரத்தில் தான் சந்திராயன் 2 தோல்வி அடைந்தது என்றும் ஆனால் சந்திராயன் 3 தோல்வி அடைய மிக குறைவான வாய்ப்புகள் தான் இருக்கிறது என்றும் சந்திராயன் 3 அனைத்து சமிக்ஞைளையும் சரியாக அனுப்பி வைக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
சந்திராயன் 3 தரையிறங்கும் நேரம்  மற்றும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சந்திராயன் 3 தரையிறங்கும் இடம் மிகவும் பாதுகாப்பானது என்றும் எனவே சந்திராயன் 2 போல சந்திராயன் 3 தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்  
 
‘சந்திராயன் 3’ தரை இறங்கினால் அது உலகிலேயே ஒரு சரித்திர சாதனையாக இருக்கும் என்றும் இந்தியா அந்த சரித்திர சாதனைகளை நிச்சயம் படைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments