சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது நிலவுக்கு சில கிலோமீட்டர்கள் மேலே உயரத்தில் சுற்றி வரும் விக்ரம் லேண்டர் மெல்ல நிலவில் தரையிறங்க தயாராகி வருகிறது.
சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறை இன்று மாலை 5.44 மணிக்குத் தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் நிலவில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், லேண்டர் வாகனம் மெல்ல மெல்ல நிலவை நோக்கி தானியங்கி முறையில் இறங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே வியந்து பார்த்து பாராட்டி வரும் நிலையில், நடிகர் மாதவன் 'சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும்' எனப் பாராட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ''என் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்... அற்புதமான வெற்றிபெறவுள்ள இஸ்ரோவுக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கும் எனது வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை வரலாறு குறித்த கதையம்சம் கொண்ட ராக்கெட்டரி திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இப்படத்தை மாதவன் இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.