Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை ! எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:26 IST)
ஜூன் 30 ஆம் தேதி வரை எஸ் பி ஐ வங்கி ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கி வரம்பை மீறி எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திலோ அல்லது பிற ஏடிஎம்களிலோ பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. இந்த சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக எஸ்பிஐ  வாடிக்கையாளர்கள் எஸ் பி ஐ ஏடிஎம்களில் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாகப் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments