Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி? ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி? ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
, புதன், 1 ஏப்ரல் 2020 (08:30 IST)
ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் மட்டுமே மொபைல்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஒருசில பியூச்சர் போன் வைத்திருப்பவர்களால் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய முடியாது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏடிஎம் மூலம் "ரீசார்ஜ் ஏடிஎம்" என்னும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இந்த முறை மூலம் ரீசார்ஜ் செய்ய ’ஓடிபி’ என்ற எண் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
* முதலில் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருகவும்.
 
* மெயின் மெனு சென்று “ரீசார்ஜ்” எனும் ஆப்சனை தேர்வு செய்யவும்.
 
* நீங்கள் “ரீசார்ஜ்” மெனுவிற்குள் வந்ததும், உங்கள் 10 இலக்க ஜியோ மொபைல் எண்ணை உள்ளிடவும்.
 
* உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்த பின்னர் ஓகே அல்லது எண்டர் என்ற பட்டனை அழுத்தவும்
 
* பின்னர் உங்கள் ஏடிஎம் பின் எண்ணை பதிவு செய்யவும்
 
* இப்போது நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தொகையை பதிவு செய்யவும்
 
* அதன்பின்னர் ரீசார்ஜ் மதிப்பை உறுதிசெய்து என்டர்-ஐ அழுத்தவும்
 
* ஏடிஎம் இயந்திரத்தின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும், அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள், 
 
இந்த புதிய ஜியோ ரீசார்ஜ் வழிமுறையானது AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India ஆகிய வங்கிகளின் ஏ.டி.எம்களில் பயன்படுத்தி கொள்ளலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொபைலை சுவிட்ச் ஆப் செய்த டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்: அதிர்ச்சி தகவல்