Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோவில் குவியும் முதலீடுகள்… சவூதியைச் சேர்ந்த நிறுவனம் ₹ 11,367 கோடி முதலீடு

Advertiesment
ஜியோவில் குவியும் முதலீடுகள்… சவூதியைச் சேர்ந்த நிறுவனம் ₹ 11,367 கோடி முதலீடு
, வியாழன், 18 ஜூன் 2020 (22:40 IST)

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.99 பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம்  ₹ 43,574 கோடிக்கு வாங்கியது.

இதனையடுத்து, சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா போன்ற  நிறுவனங்களும்  ஜியோவின் பங்குகளை வாங்கின.பின்னர் அபுதாபி நாட்டைச் சேர்ந்த பெரும் முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.16 %பங்குகளை  ரூ.5683 கோடிக்கு வாங்கியது.

இதனைத்தொடந்து  7 வாரங்களாகவெ சில முதலீட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தன. இந்நிலையில்,  ADIA, L Catterton போன்ற நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த PIF என்ற நிறுவனம் ஜியோவின் 2.32% பங்குகளை ரூ.11,367 கோடி கொடுத்து வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட வாய்ப்பில்லை - முதல்வர் அறிவிப்பு