Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட வாய்ப்பில்லை - முதல்வர் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக  கொண்டாட வாய்ப்பில்லை - முதல்வர் அறிவிப்பு
, வியாழன், 18 ஜூன் 2020 (22:35 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது.

இந்த விழாவில் 10 வது நாளின்போது, விநாயகர் சிலையை வைத்து பக்தர்கள் பூஜை செய்வார்கள். தினமும் பஜனைகள் நடைபெறும். அதன்பின்னர் ஆறுகளில் , கடலில் கரைப்பார்கள்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலையில் தற்போது இந்தியாவில் கொரொனா தொற்று உள்ளதால் அதிலும் குறிப்பாக மஹாராஷ்டிராவில் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த வருடம் விமரிசையாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் இன்று உச்சபட்சம்