Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவினர்களை தாக்கினால் வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும்: சரோஜ் பாண்டே எச்சரிக்கை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:08 IST)
சமீபத்தில் கேரளாவில் பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தாக்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வருவதால் மத்தியில் ஆளும் பாஜக கடும் ஆத்திரத்தில் உள்ளது என்பது அதன் நிர்வாகிகளின் எச்சரிக்கையில் இருந்து தெரியவருகிறது



 
 
பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மத்திய அமைச்சர்களும், பாஜக நிர்வாகிகளும் கேரள அரசையும் இடதுசாரிகளையும் எச்சரித்து வரும் நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ((Durg)) மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சரோஜ் பாண்டே பேசியபோது, 'பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த யாராவது கண்வைத்தால், அவர்களது வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும் என்று எச்சரித்தார். மேலும் மத்தியில் பாஜக ஆட்சி நடப்பதால் எந்த மாநில அரசையும் கலைக்கும் அதிகாரம் பாஜகவுக்கு இருப்பதாகவும், ஆனாலும் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சரோஜ் பாண்டேவின் சர்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments