பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாகப்படும் என கேரள முதல்வர் பினராக விஜயன் அவர்கள் அறிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதவிலக்கு தினத்தன்று விடுமுறை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கேரளாவில் உள்ள பள்ளிகளில் சானிடரி நாப்கின் இயந்திரம் வைக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதேபோல் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறை உறுதி செய்யப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பள்ளிக்கல்வித்துறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குப்பையில்லா கேரளா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் பெண்கள் அதிக நம்பிக்கை உடன் வளர வேண்டும் என்றும் மாதவிடாய் ஒரு பாவம் என்று புனையப்பட்ட பொது அறிவு வெல்லட்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.