சனாதானம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் கொரோனாவை ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று பேசினார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றமும் உதயநிதிக்கு அறிவுரை வழங்கியிருந்தது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது என்றும் அது அவருடயை சிந்தனை, சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை ‛இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.