Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதியம் உயர்வு- முதலவர் அறிவிப்பு

Advertiesment
அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதியம் உயர்வு- முதலவர் அறிவிப்பு

Sinoj

, புதன், 6 மார்ச் 2024 (15:05 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
மேற்குவங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இங்கு ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த  நிலையில்,  இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலையில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,  ஏப்ரல் 2024  முதல் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.750 ஊதிய உயர்வு வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.500  உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், எங்கள் மீது நிதிக்கட்டுப்பாடு இருந்தாலும், மக்கள் மகிழ்ச்சியாக மற்றும் வளமையான வாழ்க்கை நடத்த  அரசு உறுதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆ.ராசா மனநிலை பாதிக்கப்பட்டவர்: உத்தவ் தாக்கரே கட்சி கடும் விமர்சனம்..!