Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிசர்வ் வங்கிக்குப் புதிய ஆளுநர் – மத்திய அரசு அறிவிப்பு

Advertiesment
ரிசர்வ் வங்கிக்குப் புதிய ஆளுநர் – மத்திய அரசு அறிவிப்பு
, புதன், 12 டிசம்பர் 2018 (07:31 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை அடுத்து இரண்டே நாளில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜித் படேல் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இருக்கும் நிலையில் திடீரென இரு தினங்களுக்கு முன்னர் தனதுப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது சொந்தக் காரணங்களுக்கான ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருந்தார் இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அவரின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 1990-க்குப்பிறகு பணி காலம் முடிவடைவதற்கு முன்பே ஓய்வு பெறுவதாக அறிவித்த முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ஆவார்.

இதனால் ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் தள்ளி வைக்கப்படுமா அல்லது இருக்கும் 5 நாட்களுக்குள் புதிய் ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு நேற்று பேட்டியளித்த நிதித் துறை செயலாளர் ஏ.என்.ஜா டிசம்பர் 11 (நேற்று) இரவுக்குள் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என அறிவித்திருந்தார். அவர் கூறிய படியே புதிய ஆளுநரக சக்தி காந்த தாஸ் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பணியில் இருப்பார். இவர் ரிசர்வ் வங்கியின் 25 வது ஆளுநர் ஆவார்.

சக்தி காந்த தாஸ் 1955ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் பிறந்தவர். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை திட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தோல்விக்கு இதுதான் காரணம்: விஷால்