நாட்டிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் சித்தார்த்: சாய்னா நேவால் தந்தை கேள்வி!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:20 IST)
எனது மகள் தாய் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்தார், நீங்கள் என்ன செய்தீர்கள் சித்தார்த்? என சாய்னா நேவாலின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு சித்தார்த் படுமோசமான வார்த்தைகளுடன் கூடிய ஒரு டுவிட்டை தெரிவித்தார்.
 
இதனையடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பதும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சாய்னா நேவாலின் தந்தை இது குறித்து பேட்டியளித்த போது எனது மகள் தாய் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்துள்ளார் என்றும் நடிகர் சித்தார்த் தாய் நாட்டிற்காக என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments