Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் என் நண்பர் தான், ஆனால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை: குஷ்பு

Advertiesment
சித்தார்த்
நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தான் ஆனால் உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை என நடிகை குஷ்பூ நடிகை சித்தார்த்துக்கு தெரிவித்துள்ளார்
 
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவு செய்த நடிகர் சித்தார்த்துக்கும் கண்டனம் தெரிவித்து நடிகை குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்
 
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’சித்தார்த் நீங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆனால் கண்டிப்பாக உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மோசமான செயல், உங்கள் தாயும் தந்தையும் உங்களைப் பற்றி பெருமை பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு தனி நபர் மீது உங்கள் வெறுப்பை காண்பிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் பல பாஜக பிரமுகர்களும் சித்தார்த்தின் டுவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட்: காயத்ரி ரகுராம் கண்டனம்!