பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை..! ஐயப்பனை தரிசிக்க பல மணி நேரம் காத்திருப்பு..!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:57 IST)
மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.


 
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால,  மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.  தொடக்கத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்களை பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி வைப்பதால் அவர்கள் தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போலீசார் பக்தர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

இதனால்  பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்துக்காக வரும் 25-ஆம் தேதி வரை 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதுதவிர உடனடி கவுண்டர்கள் மூலமும் முன்பதிவு செய்துள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments