சபரிமலையில் ஐயப்பன் கோவில் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வேளை அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பலர் மாலை போட்டு, விரதம் இருந்து சபரிமலைக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டும் நேற்று முதலாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வசதிக் கொண்ட அன்னதான மண்டபத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை உப்புமா, சுக்கு காபியும், மதியம் 12.30 முதல் 3.30 வரை அளவில்லா மதிய சாப்பாட்டுடன், காய்கறி கூட்டு, பொறியலும், மாலை 4 மணி முதல் இரவு வரை பயறு கஞ்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.