Publish Date: Mon, 18 Nov 2019 (10:59 IST)
Updated Date: Mon, 18 Nov 2019 (11:03 IST)
கர்நாடக மாநில எம்.எல்.ஏவை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மைசூர் நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீர் சேட், நேற்று மைசூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது ஃபர்ஹான் என்பவர் அவரது அருகிலே வந்து தனது கூர்மையான கத்தி ஒன்றை எடுத்து அவரை குத்தினார்.
கத்தியால் குத்திய நபரை மக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் எம்.எல்.ஏ. தன்வீரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கத்தியால் குத்திய ஃபர்ஹானை போலீஸார் விசாரித்ததில், வேலை வாங்கி தருவதாக பலமுறை தன்னை அலையவைத்ததால் கத்தியால் குத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.