வருமானவரி சட்டத்தின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, இதனை நினைவுப்படுத்தியும் அபராத தொகையை குறிப்பிட்டும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு...
# வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான வரும் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை.
# மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு, அதேசமயம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் ரூ.1000 அபராதம்.
# மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஆனால் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் ரூ.5,000 செலுத்த வேண்டும்.
# இதனையே டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் ரூ.10,000 செலுத்த வேண்டும்.