Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கு பார்த்தாலும் 2000 ரூபாய்.. ஒரே நாளில் பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியே வரும் அதிசயம்..

Webdunia
புதன், 24 மே 2023 (08:34 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் 2000 ரூபாய் நோட்டை கண்ணில் கூட பார்க்காத நிலையில் நேற்று ஒரே நாளில் ஏகப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வெளியே வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க் உள்பட பல கடைகளில் நேற்று பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டைதான் கொண்டு வந்ததாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகளில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாற்ற முடியாது என்பதால் கோடி கணக்கில் 2000 ரூபாய் நோட்டை பதுக்கியவர்கள் ஏஜென்ட்கள் மூலம் பொதுமக்களிடம் கொடுத்து அதை கடைகளில் மாற்றி வருவதாக கூறப்படுகிறது. 
 
2000 ரூபாய் மாற்றி கொடுத்தால் ஆயிரம் ரூபாய் கமிஷன் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் அந்த பணத்தை மாற்றி பதுக்கல்காரர்களின் ஏஜண்டுகளிடம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை காவல்துறையினர் விசாரணை செய்தால் மட்டுமே தெரிய வரும். 
 
மொத்தத்தில் 2000 ரூபாய் நோட்டை சில ஆண்டுகளாக கண்களிலேயே பார்க்காத மக்களிடம் நேற்று சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments