புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா.. புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்..!

Webdunia
புதன், 24 மே 2023 (08:12 IST)
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா அழைப்பு கிடைத்ததும் புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய எதிர்கட்சிகள், குடியரசு தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றும் அவரை புறக்கணித்தது தவறு என்று கூறி வருகின்றனர்
 
காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments