ரயில் டிக்கெட் எடுக்க பயணிகள் 2000 ரூபாய் நோட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை அடுத்து வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் ஒருவர் ஒரு நாளுக்கு பத்து எண்ணிக்கையில் மட்டும் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் தனியார் கடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் 2000 ரூபாய் நோட்டை செப்டம்பர் 30ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு 2000 ரூபாய் நோட்டை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.