Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia
Advertiesment

மோடி வெற்றி பெற்றாலும் ஒரு ஆண்டு தான் பிரதமராக இருப்பார்: தெலுங்கானா முதல்வர் பேச்சு..!

revandh -ragul gandhi

Siva

, சனி, 11 மே 2024 (16:14 IST)
பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயதாகிறது என்றும் பாஜகவில் பொதுவாக 75 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் பிரதமர் மோடி பிரதமர் ஆனாலும் அவர் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார் என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி உள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய போது 75 வயது ஆகிய எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள் என்றும் மோடிக்கும் தற்போது 74 வயதாகும் நிலையில் அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனாலும் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவை பொறுத்தவரை 75 வயது ஆகிவிட்டால் ஓய்வு பெற்ற வேண்டும் என்பதுதான் கொள்கை என்றும் அப்படித்தான் இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்றும் ஆனால் 75 வயது ஆன பிறகு பிரதமர் மோடி ஓய்வு பெற தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் மோடி பாழாக்கிவிட்டார் என்றும் நாடு மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது என்றும் இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணமகன் ஊர்வலத்தில் ஏற்பட்ட விபத்து: தாலி கட்டுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் உயிரிழப்பு..!