Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதில் எந்த கேவலமும் இல்லை: பெண் கலெக்டரில் அதிரடி பதில்

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (19:51 IST)
ஒருவர் கட்டிய புடவையை இன்னொருவர் கட்டுவதில் எந்த கேவலமும் இல்லை என்று கூறிய கேரள மாநில பெண் கலெக்டர் ஒருவர், இன்னொருவர் அணிந்த புடவையை கட்டி வீடியோ ஒன்றையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கலெக்டர் கே.வாசுகி சமீபத்தில் ஷிவகிரி என்றா மலைக் கோயிலிலுக்கு சென்றார். அங்கு சில ஆண்டுகளாக இயங்கி வந்த  மறு பயன்பாட்டுக்கான மையத்துக்கு சென்ற அவர் இன்னொரு பெண் பயன்படுத்திய புடவையை வாங்கினார்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலெக்டர் வாசுகி மறு பயன்பாட்டுக்கான மையத்தில் வாங்கிய புடவையை அணிந்திருந்தார். சொன்னபடியே அவர் மற்றொருவர் கட்டிய புடவையை அணிந்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், பிறர் உடுத்திய பழைய புடவையை அணிவதில் எனக்கு எந்த கேவலமும் இல்லை. இதன் நோக்கமே சுற்றுச் சூழல் மாசுபாட்டை தவிர்ப்பது. இப்போது நான் அணிந்துள்ள இந்தப் புடவையானது இன்னும் 15 வருடங்கள் தாங்கும். இதனை எப்போதெல்லாம் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் அணிவேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை சுமார் ஐந்து லட்சத்து 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளதாகவும், சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments