Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 22 April 2025
webdunia

இப்படியா உடை அணிவது? நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் : கொதித்தெழுந்த சின்மயி

Advertiesment
Chinmayi
, திங்கள், 29 அக்டோபர் 2018 (13:11 IST)
செய்தியாளர் சந்திப்பில் தான் அணிந்திருந்த உடையை விமர்சித்தவர்களுக்கு பாடகி சின்மயி விளக்கமளித்துள்ளார்.

 
மீ டூ விவகாரம் தொடர்பாக பல பாலியல் தொல்லைகள் குறித்து பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது இவர் கூறியுள்ள புகார்கள் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில், சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலை மற்றும் சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது, சின்மயி அணிந்திருந்த உடையை வைத்து சிலர் அவரை விமர்சனம் செய்திருந்தனர். பாடகின்னா சேலைதான் கட்டி வர வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
webdunia

 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி “தமிழ் சமுதாயத்தில் உள்ள ஆண்கள் இதுபோன்ற மீம்ஸை உருவாக்கியுள்ளனர். பாடகிகள் எனில் புடவைதான் அணியவேண்டும் இல்லையேல் அவர்கள் தவறானவர்கள் எனக்கூறியுள்ளனர். கழுத்து வலிக்காக தோல்பட்டை பெல்ட்டை நான் அணிந்துள்ளேன். அது பிரா அல்ல” எனக் காட்டமாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தில்லுக்கு துட்டு 2' - குடும்ப பேய்களுடன் மிரட்ட வரும் சந்தானம்!