மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மாணவர் நவீன் இறப்பிற்கு நீட் தேர்வுதான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்தனர். இதே கருத்தை முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
இ ந் நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒரு பதிவிட்டடுள்ளார். அதில், வரும் 2023 ஆம் ஆண்டு வரவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.