2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை யாராவது வைத்திருந்தால் அவர்கள் தபால் வழியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் பின்னரும் இந்தியாவில் உள்ள அனைத்து ரிசர்வ் வங்கி கிளைகளில் நேரடியாக 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவிதமான கால அவகாசம் கிடையாது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூபாய் 2000 ரூபாய் மாற்ற மக்கள் கூடுவதை தவிர்க்கும் போட்டு தபால் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு 2000 ரூபாய் நோட்டில் நோட்டை தபால் வழியாக அனுப்பி வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.