Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

Mahendran
சனி, 31 மே 2025 (11:57 IST)
முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கர்நாடகா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவை ஏற்கனவே ஒருமுறை திருப்பி அனுப்பிய ஆளுநர் தற்போது மீண்டும் ஒருமுறை திருப்பி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாஜக எம்எல்ஏக்களின் எதிர்ப்பையும், மீறி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும், இது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதிக்கும் அவர் பரிசீலனைக்கு அனுப்பினார்.
 
இந்த நிலையில், கர்நாடக சட்டத்துறை இந்த மசோதாவை மீண்டும் திருத்தி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த மசோதாவையும் இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
 
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பியதால், முதல்வர் சித்தராமையா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து ஆளுநர் விளக்கம் அளித்த போது, அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா, இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments