ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

Mahendran
சனி, 31 மே 2025 (11:49 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் சந்திப்பு இன்று நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பின்போது 2026 ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணி மற்றும் ராஜ்யசபா தொகுதி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
 
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் சென்று, தேமுதிக பொருளாளர் சதீஷ் அவரை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின்போது தங்களுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாக சுதீஷ் தெரிவித்ததாக தெரிகிறது.
 
அதற்கு எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து பதில் அளிப்பதாக கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக இணையுமா, தேமுதிகவுக்கு ராஜ்யசபா தொகுதி கொடுக்கப்படுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments