கடும் எதிர்ப்புகளை மீறி கர்நாடக மாநில சட்டசபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
கட்டாய மதமாற்ற தடை சட்டம் கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் அந்த சட்டம் சட்டத்துறை அமைச்சர் மது சுவாமி அவர்களால் கொண்டு வரப்பட்டது
இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சட்ட முன்வரைவு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த சட்ட முன்வரைவு கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டதாக சட்ட அமைச்சர் மதுசுவாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது