இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவிவரும் நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை காக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்த வேண்டுகோளை ஏற்று டாடா நிறுவனம் ரூ 1500 கோடி நிதியுதவி செய்தது. அதன் பின்னர் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் நிதி உதவி செய்து வந்தது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம்ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100 பெட்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனை ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது என்பதும், மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 5 கோடியும், குஜராத் மாநில முதல்வரின் நிவாரண நிதியாக 5 கோடியும் வழங்கி உள்ளது
தற்போது பிரதமரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ரூபாய் 500 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது மட்டுமின்றி ஏராளமான மக்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகளையும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது