Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேறு சாதி ஆணை காதலித்த பெண்ணை, அரைநிர்வாணமாக ஓடவிட்ட உறவினர்கள்..

Advertiesment
வேறு சாதி ஆணை காதலித்த பெண்ணை, அரைநிர்வாணமாக ஓடவிட்ட உறவினர்கள்..
, புதன், 4 செப்டம்பர் 2019 (18:31 IST)
இன்றைய உலகம் இணையதளத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், நவநாகரிகத்தில் சஞ்சரித்தாலும் வெளிநாடுகளில் காணப்படுகின்ற இனவெறியும் , நம் நாட்டில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகளும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம். 
இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள அலிராஜ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை காதலித்துவந்துள்ளார். எனவே இருவரும் திருமணம் செய்துகொள்ள வீட்டாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் வெவ்வெறு சாதி என்பதால் இருவீட்டாரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.
 
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண், காதலித்த இளைஞனுடன் சென்று அவருடம் இருந்துவந்துள்ளார். அதனால் கோபமடைந்த பெண்ணின் உறவினர்கள், பெண் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரை சாலையில் அழைத்து வந்தனர். அப்போது உறவினர்கள் பெண்ணின் சேலையை உருவி, அவரை அரை நிர்வாணத்துடன் ஓடவிட்டனர்.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
 
இதுகுறித்து அங்குள்ள போலிஸார் வழக்கு பதியவில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் விசாரணை நடத்துவோமென்று போலீஸார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளி மாநிலத்தவருக்கு தமிழகத்தில் ரேசன்: அப்போ தமிழர்களுக்கு?? – வைகோ கண்டனம்