கடந்த ஜூலை மாதத்தில், ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் (55)வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர் அஸ்ராப் பணியில் இருந்துள்ளார்.
பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர் அஸ்ராப், அவருக்கு மருத்துச் சீட்டில் நிரோத் என்று எழுதிக்கொடுத்துள்ளார். அப்பெண்ணும் அதை மருந்து என்று மருந்தகத்தில் கொடுத்தபோது, மருந்தாளுநர்கள் காண்டம் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.
பின்னர் இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் அம்மாநில சட்டசபையிலும் எழுப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்களது விசாரணனையிலும் பெண்ணுக்கு, மருத்துவர் எழுதிக்கொடுத்தது காண்டம் தான் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மருத்துவரை பணியிலிருந்து நீக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.