Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறதா டெல்லி செங்கோட்டை: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (08:39 IST)
மூடப்படுகிறதா டெல்லி செங்கோட்டை
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் குடியரசு தின நிகழ்வு அன்று திடீரென செங்கோட்டையில் புகுந்து விவசாயிகள் சங்கத்தின் கொடி ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த வன்முறை நிகழ்வில் விவசாயிகள் சிலரும் காவல்துறையினரும் காயமடைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் புகுந்து கொடியை ஏற்றும்போது செங்கோட்டை சேதமடைந்ததாகவும் இதனை பழுதுபார்க்கும் பணிக்காக ஜனவரி 31ஆம் தேதி வரை செங்கோட்டை மூடப்படுவதாகவும், அதுவரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது
 
இதனால் டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக செங்கோட்டையின் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை பேச விடுங்க..! தோள் கொடுத்து நின்ற எடப்பாடியார்! - முடிவுக்கு வந்த மோதல்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வெற்றி செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 நாட்களில் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?

நடப்பாண்டுடன் மூடப்படும் கோவை தனியார் பள்ளி.. மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

மாரடைப்பால் உயிரிழந்த தாயிடம் கண்ணீர் மல்க விடைபெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவி!

அடுத்த கட்டுரையில்
Show comments