தமிழக தலைமை செயலாளர் ஆகிறாரா ராஜீவ் ரஞ்சன்,?

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (08:22 IST)
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக தற்போது இருந்து வரும் சண்முகம் ஏற்கனவே ஓய்வு பெற்று தற்போது பணி நீட்டிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு பணியில் நியமனம் செய்யப்பட்டவர். இவர் தற்போது மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் பணிக்காக ராஜீவ் ரஞ்சன் அவர்களை தமிழகத்திற்கு அனுப்பும் படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது 
 
தமிழக தலைமைச் செயலாளராக தற்போது பணியாற்றி வரும் சண்முகம் அவர்களின் பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை எடுத்து ராஜீவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படும் ஆணை குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்கு இலவச Subscription.. பயனர்களை அதிகரிக்க ChatGPT எடுத்த அதிரடி முடிவு..!

நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் சரியும் என தகவல்..!

விக்கிப்பீடியாவுக்கு பதில் இன்னொரு தளம்.. எலான் மஸ்க்கின் ஏஐ தொழில்நுட்ப 'க்ரோக்கிப்பீடியா' அறிமுகம்!

இன்று செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம்.. வானிலை சாதகமாக இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments