Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர்கிறதா ரீசார்ஜ் கட்டணங்கள்..? ப்ரீபெய்ட் - போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் உயர்த்த திட்டம்..!!

Advertiesment
Telecom Companies

Senthil Velan

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (18:24 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசிக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் கட்டணங்களை சுமார் 15% முதல் 17% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த கட்டண உயர்வால் ஏர்டெல் நிறுவனம் பெருமளவில் பயனடையும் என்றும், ஏர்டெலின் ஒரு பயனர் மீதான சராசரி வருவாய்(ARPU) தற்போதைய ரூ.208-ல் இருந்து ரூ.286-ஆக உயரும் என Antique Stock Broking நிறுவனம் கணித்துள்ளது.

 
கடைசியாக கடந்த 2021 டிசம்பர் மாதம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 20 சதவிகிதம் வரை தொலைபேசி கட்டணங்களை உயர்த்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர்..! ராகுல் காந்தி...!!