Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ரூ.1000 நோட்டு: ரூ.2000 நோட்டுக்கு ஆபத்தா?

Advertiesment
Urjit Patel | Rs 50 notes | rs 200 notes | reserve bank of india | RBI Governor | RBI | printing presses at Mysore and Salboni | prime minister Narendra Modi | New Rs 1000 Note | demonitisation | automated teller machines | ATM
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (05:39 IST)
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது கருப்புப்பணம் ஒழிந்ததோ இல்லையோ பெரும்பாலான நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் ரூ.500, ரூ.2000, ரூ.200 மற்றும் ரூ.50 புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துள்ள நிலையில் தற்போது திடீரென மீண்டும் ரூ.1000 நோட்டு அச்சடிக்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறியபோது, 'புதிய 1000 ரூபாய் நோட்டில் சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றும், புதிய நோட்டுக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். இந்த நோட்டுக்கள் மைசூரு மற்றும் சல்போனியில் அச்சடிக்கப்பட உள்ளது.”
 
இந்த அறிவிப்பு பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.2000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்துவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பானை போட்டுத்தள்ள திட்டமா? வடகொரியா ஏவிய ஏவுகணையால் பரபரப்பு