ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த செய்திகள் தவறானது என எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் தனது அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.
ஜூன் மாதம் முதல் எஸ்பிஐ ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.
இது தவிர மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது.