மத்திய அரசு விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நவீன காலத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் கிரிப்டோ கரன்சியின் பக்கள் கவனத்தைச் செலுத்து வரும் நிலையில், இதில் முதலீடு செய்த பலர் ஏமாற்றங்களைச் சந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு பலமுறை எச்சரித்தும் சிலர் இந்த கிரிப்டோ கரன்சியின் மீதான மோகம் காரணமாக இன்னும் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசு டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையயின் போது, டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
எனவே, விரைவில் டிஜிட்டல் ரூபாய்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும்,இது சோதனை முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.