செய்தியாளர்களை சந்திக்கின்றார் ரிசர்வ் வங்கி ஆளுனர்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பின்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் வங்கிச்சேவை உள்பட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளது. பொதுமக்கள் வேலையின்றி இருப்பதால் மாதத்தவணை செலுத்துவது உள்பட எந்த தவணையையும் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்
இந்த நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்குவது உள்பட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுனர் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மாதத்தவணை செலுத்துவது, சிறப்பு கடன் வழங்குவது ஆகியவை குறித்து முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது