அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு கூறியுள்ளதால், முதல்அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவுப்படி, அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அரிசி போலிக் அமிலம், இரும்புச்சத்துகள் ஆகிய சத்துகளை உள்ளடக்கியது எனவும் 100 கிலோவில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.