Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை பிரதமராக்க பெருகி வரும் ஆதரவு!!!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (16:36 IST)
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அன்றாடம் பொதுக்கூட்டங்களில் பங்குபெற்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
 
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது பேசிய ஸ்டாலின், பாசிச பாஜக ஆட்சியை ஒழித்து, ராகுல் காந்தியை பிரதமராக்குவேன் என கூறினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என ஸ்டாலின் கூறியது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த்யது. இதைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சரும் ஜனதா தளம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறது என கூறினார்.
இந்நிலையில் இன்று பீகாரில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் கலந்துகொண்டு பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தேஜஸ்வி யாதவ் பாஜக நாடு முழுக்க கலவரத்தை கொண்டு வர பார்க்கிறது. இவர்களை அடக்க ராகுல் காந்தி தான் சரியானவர். எங்களது கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறோம் என கூறினார்.
 
தொடர்ந்து  காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் வலு சேர்ந்துகொண்டே வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments